News January 12, 2026
அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசில்லாமலும் கொண்டாடுவோம் என வாழ்த்து வெளியாகி உள்ளது.
Similar News
News January 28, 2026
தருமபுரியில் பயங்கர தகராறு!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி முஸ்லிம் தெருவில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது, நில உரிமை தொடர்பாக மருமகள் சம்சுந்தாஜ் மற்றும் மாமனார் சோட்டா லால் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியதில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருதரப்பு புகாரின் பேரில் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
News January 28, 2026
தருமபுரி: பெண் அதிரடி கைது!

காரிமங்கலம் போலீசார் பாலக்கோடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சட்டவிரோதமாக மது விற்ற அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி (45) என்பவரைப் பிடித்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், சிவகாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நேற்று பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர்.
News January 28, 2026
தருமபுரி: +1 மாணவன் பரிதாப பலி!

ஏரியூர் அருகே குருக்கலையனூரைச் சேர்ந்த +1 மாணவன் சர்மா 16, தனது தாய் செடிகளுக்கு அடித்த களைக்கொல்லி மருந்தை கவனக்குறைவாகத் தொட்டுள்ளார். பின்னர் கையை சரியாகக் கழுவாமல் உணவு உண்டதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


