News September 12, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்..!

சேலம் மாவட்டத்தில் காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் வரும் செப்.15 மாலை 05.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
சேலத்தில் தகாத உறவால் நேர்ந்த கொலை?

சூரமங்கலத்தை சேர்ந்த விவசாயி செல்லப்பன் (65) கடந்த செப்.6-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கந்தம்பட்டியைச் சேர்ந்த பிரபு (32),தினேஷ் (20),குமரவேல் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதில் பிரபு என்பவர் செல்லப்பன் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகவும்,இதற்கு செல்லப்பன் தடையாக இருந்ததால் கொலை செய்ததாகவும் பரபரப்பு வாக்கு மூலம் வெளியாகியுள்ளது!
News September 12, 2025
சேலம்-கடலூர் ரயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்படுமா?

சேலம்-கடலூர் (போர்ட்) பயணிகள் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று சேலம் ரயில்வே கோட்ட உபயோகிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல், சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக பகல் நேரத்தில் சென்னை ரயில் இயக்க வேண்டும். நடைமேடைகளை அதிகரிக்க வேண்டும், லிஃப்ட் மற்றும் எக்ஸ்லேட்டர்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
News September 12, 2025
சேலம்: டிகிரி போதும் வங்கியில் மேனேஜர் வேலை!

▶️அரசு வங்கியான BOB Capital Markets Limited வங்கியில் காலியாக உள்ள 70 Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது ▶️ இதற்கு BA,BSC,BE,B.TECH உள்ளிட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்▶️தங்கள் சுயவிவரக் குறிப்பு (resume), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை careers@bobcaps.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்▶️SHARE பண்ணுங்க!