News January 19, 2026
அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக நாளை(செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதியம் 2 மணி முதல் 3 மணிவரை திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பரிசாக ரூ.5,000 வீதம் முதல் 5 பேருக்கும், 2-வது பரிசாக ரூ.3000 வீதம் 5 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.2000 வீதம் 5 பேருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. ஷேர்
Similar News
News January 23, 2026
தாம்பரத்தில் பரபரப்பு!

தாம்பரம் அற்புதம் நகரில் சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி மணிகண்டன் வீட்டின் மீது 3 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஒரு குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சச்சின், வினோத் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். தன்னை கிண்டல் செய்த மணிகண்டனை பயமுறுத்தவே வெடிகுண்டு வீசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
News January 23, 2026
மதுராந்தகம்: ஆட்சியர் புதிய அறிவிப்பு!

மதுராந்தகம் தனியார் ஓட்டல் எதிரே பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளதால் இன்று 23.1.26 காலை 7:00 மணி முதல் மாலை 7 மணி வரை GST சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அவசரக்கால ஊர்திகள் வழக்கம்போல் அதே பாதையில் செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
மதுராந்தகம் வரும் பிரதமர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரசாரத்தைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மதுராந்தகத்திற்கு வர உள்ளார். இந்த நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


