News December 12, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வசிக்கும் சொந்த வீடில்லா ஏழை குடியிருப்புவாசிகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம் பெற https://tnuhdb.tn.gov.in/webhome/dept_beneficiary_form.php என்ற இணையதளத்தில் நேரிலோ, இ-சேவை மையத்தின் மூலமாகவோ உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
கரூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி!

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல். இ.ஆ.ப., தலைமையில் இன்று (12.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், முதற்கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தார்.
News December 12, 2025
வெங்கமேடு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்!

கரூர், வெங்கமேடு ரயில்வே பாதை அருகே வேப்ப மரத்தில் சுமார் 35 வயதுமிக்க இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். இச்சம்பவம் அப்பகுதி விஏஓ பிரகாசுக்கு தெரிவிக்கப்பட்டு பிறகு பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் நேற்று கொலையா அல்லது தற்கொலையா என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News December 12, 2025
கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!


