News December 5, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

தொல்குடியினர் புத்தாய்வுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இளங்கலை/முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000, முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் 12.12.2025 வரை fellowship.tntwd.org.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
கரூர்: இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்
News December 6, 2025
கரூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News December 6, 2025
கரூரில் வசமாக சிக்கிய இளைஞர்!

கரூர் மாவட்டம் காளியப்பனூர் தரிசு காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தாந்தோணிமலை போலீசார் மது விற்ற திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.


