News October 30, 2025
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்

ஈரோடு மாவட்டத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஏப்ரல் முதல் தற்போது வரை இல்லனா வரவு செலவுகள், பருவ மழை முன்னேற்றத்திற்கு நடவடிக்கை குறித்து விவாதிக்கலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
ஈரோடு: ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு பள்ளிகல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் அரசு பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு நவ.29ம் தேதி நடக்க உள்ளது. தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு 4 ஆண்டுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் மாணவ, மாணவியர் ஊரக திறனாய்வு தேர்வுக்கு வரும், நவ.04க்குள் விண்ணப்பிக்க அழைப்பு வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
News October 30, 2025
ஈரோடு: உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

ஈரோட்டில், தொழிலாளா்கள் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் கே.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பதை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் சென்னை-600006 க்கு டிச.31க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
News October 30, 2025
ஈரோடு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


