News November 25, 2025

அறிவாலயத்தில் பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி

image

நவ.27-ல் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் DCM உதயநிதி. இந்நிலையில், திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதல்முறையாக உதயநிதி பிறந்தநாள் கொண்டாடவுள்ளாராம். அன்றைய தினம் சுமார் 50,000 தொண்டர்கள் நேரடியாக உதயநிதிக்கு வாழ்த்து கூறவுள்ளனராம். கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் அறிவாலயத்தில் பிறந்தநாள் கொண்டாடவுள்ள உதயநிதியை, 2026 தேர்தலில் முக்கிய முகமாக மாற்ற திமுக முயற்சிக்கும் என்கின்றனர்.

Similar News

News March 6, 2026

பைக்குகளுக்கு மார்ச் மாத சலுகைகள்!

image

பைக் வாங்க பிளான் பண்ணியிருக்கீங்களா? மார்ச் மாத சிறப்பு சலுகைகள் தொடங்கி உள்ளன. Hero மற்றும் Suzuki தனது பைக்குகளுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சமாக ₹3,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளன. எந்தெந்த மாடல் பைக்குகளுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே உள்ள போட்டோக்களை இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.

News March 6, 2026

மறதிக்கு முன்பே அல்சைமரை கண்டறியலாம்

image

நினைவாற்றல் குறையும் போதுதான் அல்சைமர் நோய் தொடங்க வேண்டும் என்பதில்லை. இது 15-20 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் சத்தமாக தொடங்குகிறது. இதன் ​​அறிகுறிகள் எப்போது தொடங்கும் என்பதை p-tau217 எனப்படும் புரதத்தை கண்டறியும் ரத்த பரிசோதனை மூலம் நோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிய முடியும் என்று நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது நோயை சீக்கிரம் கண்டறிந்து, விரைவாக சிகிச்சையை தொடங்க உதவுகிறது.

News March 6, 2026

துபாய் மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் அலர்ட்!

image

ஈரானின் ஏவுகணை தாக்குதலால் துபாய், அபுதாபி, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பதற்றத்தில் உள்ளன. இதனிடையே, துபாய் மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் குறித்த எச்சரிக்கை செல்போன் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. துபாயில் ஏராளமான தமிழர்கள் வசித்துவரும் நிலையில், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யவும் கோரிக்கை வலுத்துள்ளது.

error: Content is protected !!