News August 6, 2024
அறந்தாங்கி முகாமில் அமைச்சர் ஆய்வு

அறந்தாங்கி வட்டம், அழியாநிலை வருவாய் கிராமத்தில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவரும் குடும்பங்களுக்கு, புதிய வீடுகள் கட்டுவதற்கான இடத்தினை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் திரு. ச. சிவக்குமார், மற்றும் பலர் உள்ளனர
Similar News
News March 28, 2026
புதுகை: பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறலாம்!

புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம், தங்க வெள்ளிப் பொருட்கள் பறிமுதக் செய்யப்பட்டுள்ளன. அவற்றை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்பப் பெற குறைதீர்க்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுகை மாவட்டத்திற்கு 7373704 221 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் தெரிவித்துள்ளார்.
News March 28, 2026
மாவட்ட ஆட்சியர் தலைமையில் மினி மாரத்தான் போட்டி!

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாளை (29.3.2026) மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இப்போட்டியானது காலை 6 மணி அளவில் தொடங்க உள்ளது. இந்த மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீ சர்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 28, 2026
ரூ4.5 லட்சம் மதிப்பிலான நெகிழி பொருள் பறிமுதல்

புதுகை நகரக் காவல் நிலையம் எதிரே உள்ள நெகிழிப்பைகள் விற்கும் கடைகளில் மாநகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் தலைமையிலான அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகள், டம்ளர்கள் என ரூ.4.5 லட்சம் மதிப்பிலான 3 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


