News November 15, 2024

அர்ஜுன் சம்பத் மகன் கோவை சிறையில் அடைப்பு

image

நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து ஜே.எம்:3, கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 28 வரை, நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அருண்குமார் (பொறுப்பு) உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News March 2, 2026

கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 2, 2026

வெள்ளியங்கிரி செல்வோர் கவனத்திற்கு

image

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் புனிதத்தைப் பேணும் வகையில், செருப்பு மற்றும் ஷூ அணிந்து மலை ஏறப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியைத் தூய்மையாகப் பராமரிக்க ஒத்துழைக்குமாறு வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

News March 2, 2026

கோவை: அதிமுகவில் இணைந்த தவெகவினர்

image

கோவை வடக்கு தொகுதி பூசாரிபாளையத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி எம்.எல்.ஏ அம்மன் K.அர்ச்சுணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, பார்த்திபன், பகுதி செயலாளர் நடராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இணையும் நிர்வாகிகளுக்குச் சால்வை அணிவித்து அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!