News June 16, 2024

அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில், ஓராண்டு அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர், இந்து சமய கோட்பாடுகளை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

மதுரை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல…!

image

மதுரை மக்களே, இங்கு<> க்ளிக் <<>>செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 2, 2026

JUSTIN: தி.குன்றம் தீபம் விவகாரம்; பொதுமன்னிப்பு கேட்ட ஆட்சியர்!

image

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் பொதுமன்னிப்பு கேட்பதாக மதுரை ஆட்சிய பிரவீன் குமார் தெரிவித்தார். சட்டத்தை செயல்படுத்த வேண்டியது நிர்வாகத்தின் கடமை, சட்டத்தை கடைப்பிடித்து வருகின்ற பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறேன் என ஆட்சியர் தரப்பில் விளக்கம்.

News March 2, 2026

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரை பொதும்பு அருகே கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இந்த மன அழுத்தத்தில் குடி போதைக்கு அடிமையானார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மனைவி திவ்யா(26) கொடுத்த புகாரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!