News February 1, 2026

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி!

image

U19 WC பாக்.,க்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய பாக்., அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்களில் வென்ற இந்திய அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆஸி., ஆப்கன் & இங்கி., ஆகியவை ஏற்கெனவே அரையிறுதிக்கு தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன.

Similar News

News February 5, 2026

TN-ல் டார்கெட் பிக்ஸ் செய்தார் PM மோடி.. இதான் பிளான்!

image

மதுரையில் பிப்.28-ம் தேதி நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்க PM மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த கூட்டத்தின் மேடையில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளையும் கொண்டுவர சேர்க்க பாஜக தீவிரம் காட்டி வருகிறதாம். மதுரையில் இக்கூட்டம் நடைபெறுவதால் திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து PM பேசலாம் என கூறப்படுகிறது.

News February 5, 2026

அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.. OPS அதிர்ச்சி

image

அதிமுக Ex திருச்சி மண்டல ஐடி விங் செயலாளர் வினுபாலன், EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பிரிந்தபோது OPS அணியில் இருந்த வினுபாலன், அவராலேயே நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் தாய்க் கட்சியில் இணைந்துள்ளார். அதேநேரம், ராமநாதபுரம் OPS அணியைச் சேர்ந்த ஐடி விங், மகளிர் அணி நிர்வாகிகளும் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் OPS அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

News February 5, 2026

உங்கள் ஃபோனை Security Camera-வாக மாற்றணுமா?

image

உங்களிடம் பழைய ஃபோன் இருந்தால் அதை விற்றுவிடாதீர்கள். அந்த ஃபோனை Security Camera-வாக மாற்ற முடியும். ▶முதலில் பழைய ஃபோனிலும், தற்போது பயன்படுத்தும் ஃபோனிலும் ‘Alfred’ செயலியை டவுன்லோடு செய்யுங்கள் ▶ 2 ஃபோன்களிலும் ஒரே Gmail Id இருக்கவேண்டும் ▶பழைய ஃபோனில் ‘Add a Camera’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் QR code காட்டும் ▶அதை புதிய ஃபோனில் Scan செய்தால் போதும் Security Camera ரெடி! SHARE.

error: Content is protected !!