News December 21, 2025

அரையாண்டு விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் ஷாக்

image

அரையாண்டு விடுமுறை (டிச.24), கிறிஸ்துமஸ் பண்டிகை (டிச.25) காரணமாக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், ஆம்னி பஸ்களின் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – நெல்லைக்கு வழக்கமாக ₹1,800 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ₹4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை – கோவைக்கு ₹5,000, சென்னை – மதுரை ₹4,000 என வசூலிக்கப்படுவதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News December 26, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு மேலும் ₹560 உயர்வு

image

தங்கம் விலை இன்று(டிச.26) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹70 உயர்ந்து ₹12,890-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,03,120-க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,920 என தாறுமாறாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News December 26, 2025

சந்தாலி மொழியில் அரசியலமைப்பு வெளியானது

image

சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்பை ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ளார். இதனை வெளியிடுவதில் பெருமைக்கொள்வதாக கூறிய அவர், இது அந்த மொழியை பேசும் சமூகத்தினருக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவித்துள்ளார். இம்மொழியை, ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

News December 26, 2025

தேர்தல் வந்தாலே ‘ICE’-ஐ ஏவும் பாஜக: கனிமொழி

image

தேர்தல் நெருங்கும்போது ICE ( IT, CBI, ED) அமைப்புகளை களமிறக்குவதை பாஜக வழக்கமான தேர்தல் வியூகமாக வைத்துள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். TOI-க்கு அளித்த பேட்டியில், பாஜகவின் B டீமாக அதிமுக செயல்படுவதாகவும், அக்கட்சியின் கடைசி ஆண்டாக இந்தாண்டு இருக்காது என நம்புவதாகவும் அவர் கூறினார். திமுகவுக்கு எதிரான விஜய்யின் பேச்சுக்கள் பாஜகவின் தூண்டுதலாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!