News December 4, 2025
அரைநூற்றாண்டு கால தமிழ் சினிமாவின் மையப்புள்ளி!

AV மெய்யப்ப செட்டியாரின் மகனான <<18464432>>AVM சரவணன்<<>> இந்திய திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்தவர். MGR முதல் சூர்யா வரை அரைநூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவின் மையப்புள்ளியாக இயங்கியுள்ளார். சம்சாரம் அது மின்சாரம், முரட்டுக்காளை, முந்தானை முடிச்சு, சிவாஜி, அயன் போன்ற மறக்க முடியாத படங்கள் அவர் தயாரித்தவை. திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அவர், 1986-ம் ஆண்டில் சென்னையின் ஷெரிப்பாகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News December 4, 2025
BREAKING: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த TN அரசு

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30 மணிக்குள் தீபத்தை ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், இப்போது SC-யில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 4, 2025
அரசு அனுமதி மறுப்பது ஏன்? அமைச்சர் விளக்கம்

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபத்தை ஏற்றினால் போதும் என 2014-ல் வழங்கப்பட்ட தீர்ப்பையே தமிழக அரசு பின்பற்றுவதாக அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்துத்துவா அமைப்புக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம் தமிழக அரசு எப்போதும் சட்டத்தின்படியே நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News December 4, 2025
CINEMA 360°: ₹100 கோடி வசூலை தாண்டிய தனுஷ் படம்

*விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. * தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படம் உலகளவில் ₹100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. *பிரபுதேவா நடிக்கும் ‘மூன்வாக்’ படத்தில் 5 பாடல்களை ஏ.ஆர். ரகுமான் பாடியுள்ளார். *ஐஸ்வர்யா ராஜேஷின் PAN இந்தியா படத்திற்கு ‘ஓ சுகுமாரி’ என பெயரிடப்பட்டுள்ளது.


