News November 6, 2025

அரைஞாண் கயிறு கட்டுவதில் இப்படி ஒரு சிக்கலா?

image

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு கட்டுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதில் பல நன்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு சில பாதிப்புகளையும் அது ஏற்படுத்துமாம். அரைஞாண் கயிறை வருஷக் கணக்கில் இடுப்பில் கட்டுவதால் அதில் அழுக்குகள் கிருமிகள் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதனால் நூல் கயிறை தவிர்த்து வெள்ளியில் அணிவது நல்லது என தெரிவிக்கின்றனர்.

Similar News

News February 17, 2026

உக்கடம் அருகே விபத்து: இளைஞர் பலி

image

நெல்லையைச் சேர்ந்த மாடசாமி(25) கோவை-உக்கடத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று விட்டு தனது பைக்கில் வீடு திரும்பும் போது உக்கடம் பேருந்து நிலையம் அருகே விபத்தில் சிக்கினார். பின், கோவை ஜிஹெச் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 17, 2026

ஈரானிய கப்பல்களை சிறைபிடித்த இந்தியா

image

மும்பையில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் டேங்கர்களை இந்திய கடற்படை சிறைபிடித்துள்ளது. இந்த கப்பல்கள் கடலில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடற்படையிடம் இருந்து பிடிபடுவதை தடுக்க அடிக்கடி அடையாளத்தை மாற்றும் இந்த கப்பல் இந்தியன் கடற்படையிடம் சிக்கியுள்ளது.

News February 17, 2026

பொதுத்தேர்வுக்கு நேரமாச்சு.. கலக்குங்க மாணவர்களே!

image

CBSE 10, +2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 43.67 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். நடப்பாண்டு முதல், <<19161497>>தேர்வு விதிகளில் மாற்றம்<<>> கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களே, தேர்வறைக்கு கடைசி நேரத்தில் செல்ல வேண்டாம். சற்று முன்னதாகவே சென்று தயாராகுங்கள். பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST!

error: Content is protected !!