News May 3, 2024
அரூர்: மது விற்ற வழக்கில் 87 பேர் கைது

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா
தலைமையிலான போலீசார் கடந்த மாதம் முழுவதும் அரூர் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சாராயம், மதுபாட்டில்களை கள்ளத்தனமாக அதிக விலைக்குவிற்ற வழக்கில் 12 பெண்கள் உள்பட 87 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1,869 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், 900 லிட்டர் சாராய ஊறல் 3 டூவிலர் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News August 26, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 25, 2025
தருமபுரி மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

தருமபுரி மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
குறைதீர் முகாமில் 543 மனுக்கள் பெறப்பட்டது

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (ஆக.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்களிடமிருந்து புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகைகள்,உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 543 மனுக்கள் வரப்பெற்றதாக ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.