News December 21, 2024

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் தெலங்கானா முதல்வர்

image

அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா டிச.,22, 23 தேதிகளில் நடக்கிறது. 22-ம் தேதி கல்லூரி, திருச்சபை மாணவ மாணவிகள் பங்கு பெறும் குழுபாடல் போட்டி நடக்கிறது. 23-ம் தேதி நெடிய சாலை முதல் அருமனை வரை கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் அணிவகுப்பு, மேளதாளத்துடன் ஊர்வலம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் நடக்கிறது. தொடர்ந்து பிரமுகர்கள் பங்கேற்கும் சமூகநல்லிணக்க மாநாடு நடக்கிறது.

Similar News

News March 9, 2026

குமரி: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

image

குமரி மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News March 9, 2026

குமரி: காங்கிரஸ் கட்சியினர் தொடர் நடை பயணம்

image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக 8வது நாளாக கண்டன நடைபயணம் நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதை கண்டித்து கோழிப்போர்விளை முதல் முளகுமூடு வரை இந்த நடைபயணம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி லாரன்ஸ் தலைமை வகித்தார். இதில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 9, 2026

நாகர்கோவிலில் 16 வயது சிறுமி கர்ப்பம்.. சிறுவன் கைது

image

நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது சிறுவனும், 16 வயது மாணவியும் பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி மிரட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

error: Content is protected !!