News September 20, 2025

அருப்புக்கோட்டை பெண்களுக்கு ரூ.9.24 கோடி கடனுதவி

image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில், கலெக்டர் என்.ஓ.சுகபுத்ரா, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் உள்ள 191 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 1304 மகளிர்களுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது.

Similar News

News November 6, 2025

சிவகாசியில் சுட்டுப் பிடிக்க அனுமதிக்க கோரி மனு

image

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி அருகே ஈஞ்சார் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை தொடர்ந்து காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு ஆவண செய்திட வலியுறுத்தி சார் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

News November 6, 2025

அருப்புக்கோட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு

image

காரியாபட்டி அருகே வக்கனாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் ராதா (58). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று (நவ. 5) பிற்பகல் வேளையில் அருப்புக்கோட்டை சின்னப்புளியம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கால் இடறி கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 5, 2025

விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இங்கே கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!