News September 28, 2025

அருப்புக்கோட்டை: குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

image

அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன்(39). இவர் நேற்று (செப். 27) மலைப்பட்டியில் உள்ள கல்குவாரி கிடங்கில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி முரளி கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முரளி கிருஷ்ணன் உடலை கை பற்றி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 2, 2026

விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 2, 2026

விருதுநகர்: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

விருதுநகர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

News January 2, 2026

விருதுநகரில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் விருதுநகர் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000474, 9445000475, 9944242782 -ல் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!