News April 3, 2024

அருப்புக்கோட்டை அருகே ஒருவர் உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி ஸ்ரீரங்காய் (62). இந்நிலையில் வீட்டில் இருந்த ஸ்ரீரங்காய் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து இன்று விசாரிக்கின்றனர்.

Similar News

News April 16, 2025

விருதுநகரில் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழா

image

அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் ‌தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.

News April 15, 2025

விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்‌ஷிகியூட்டிவ் பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்பட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித முன் அனுபவம் தேவையில்லை. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!