News September 23, 2025

அருப்புக்கோட்டையில் செயின் பறித்த நபர் கைது

image

பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி லலிதா(62). இவர் கடந்த சனிக்கிழமை ரயில் நிலையம் அருகே நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர் லலிதா கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.‌ இது குறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம்(33) என்பவரை‌ நேற்று (செப்.22) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News September 23, 2025

விருதுநகரில் 328000 பேருக்கு மகளிர் உரிமை தொகை

image

முதல்வர் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் இதுவரை 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 22000 மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டத்தில் 72400 குழந்தைகள், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 328000 பேர் பயனடைவதாக விருதுநகரில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

விருதுநகர்: இதுவரை 19 லட்சம் பட்டாக்கள் – உதயநிதி

image

விருதுநகரில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் ஒரு பக்கம் நிதியமைச்சர், மறுபக்கம் இடம் கொடுக்கும் அமைச்சர் இருப்பதால் விருதுநகர் பலமடங்கு வளர்ந்து நிற்கிறது.விருதுநகரில் இன்று 400 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 19 லட்சம் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது என்றார்.

News September 23, 2025

நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்த துணை முதல்வர்

image

சாத்தூரில் இன்று தனியார் திருமண மஹாலில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் முடிந்ததும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதில் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமசந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!