News December 19, 2025

அருப்புகோட்டை அருகே கண்மாயில் மிதந்த சடலம்

image

அருப்புகோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி தெய்வேந்திரன், 54, இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. ஊருக்கு அருகில் உள்ள கண்மாயில் அவரின் டூவீலர் நின்று கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை கண்மாயில் தெய்வேந்திரன் மிதந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 25, 2025

விருதுநகர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

விருதுநகர் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில்(04562 – 252678) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News December 25, 2025

விருதுநகர்: SI, ஏட்டு மீது FIR பதிவு செய்ய உத்தரவு

image

அ.முக்குளம் எஸ்.ஐ., மணிகண்டன் வாக்கி டாக்கியை தொலைத்த விவகாரத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த தவக்கண்ணனை திருடியதாக ஒப்புக்கொள்ள கூறி செல்போனில் மிரட்டியதுடன் பொய் வழக்கும் பதிவு செய்தனர். இதில் பொய் வழக்கு போட்ட போலீசாருக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் தவக்கண்ணன் வழக்கு தொடர்ந்தார். இதில் எஸ்.ஐ.,மணிகண்டன், போலீஸ் ஏட்டு செல்வராஜ் மீது FIR பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

News December 25, 2025

விருதுநகர்: வீடுகட்ட ரூ.1.20 லட்சம் நிதி உதவி

image

பிரதம மந்திரி கிராமிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு அரசாங்கம் ரூ.1.20 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. இதில் முழுத் தொகையும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நிரந்தர வீடு இல்லாதவர்கள், வீடற்றவராகவோ அல்லது பாழடைந்த வீட்டில் வசிப்பவர்கள், குறைந்த குடும்ப வருமானம் உள்ளவர்கள் Aawas Survey App ஐப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!