News April 29, 2024

அரிவாள் மனையால் தாயின் கழுத்தை அறுத்த மகன் கைது

image

கெங்குவார்பட்டி அருகே வத்தலகுண்டு மெயின் ரோட்டில் அழகரம்மாள் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவரது மூத்த மகன் விஜய் என்பவர் ஹோட்டலுக்கு வந்து சொத்தை பிரித்து தரக்கோரி தகராறு செய்து அங்கிருந்த அரிவாள் மனையை எடுத்து அழகரம்மாவின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி போலீசார் விஜயை கைது செய்துள்ளனர்.

Similar News

News January 22, 2026

தேனி – தேவாரம் இடையே கூடுதல் பேருந்து

image

தேனி மாவட்டம் பெருமாள்கவுண்டன்பட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, தேனி – தேவாரம் இடையே கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி A.K.K. ரஜினி, கூடுதல் பேருந்து இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கான அறிக்கையை போக்குவரத்து அதிகாரிகள் இன்று நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.

News January 22, 2026

தேனி: இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

image

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 22, 2026

தேனி: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

image

தேனி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக் செய்து<<>> ஆதார், ரேஷன் கார்டு ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம்.SHARE IT

error: Content is protected !!