News January 8, 2025
அரிய வகை நட்சத்திர ஆமை கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கனகனந்தல் கிராமத்தில் உள்ள ஏரியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அரிய வகை நட்சத்திர ஆமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்த அரிய வகை நட்சத்திர ஆமையை அப்பகுதி மீனவர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 10, 2026
கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து!

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, பாதூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதியது.இதில், பேருந்தில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 10, 2026
கள்ளக்குறிச்சி: சிறுமியை திருமணம் செய்த வாலிபர்!

வாணாபுரம் அருகே உள்ள கரையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பேரரசன்(27). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதுகுறித்த விசாரணையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பேரரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.
News February 10, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


