News March 24, 2025
அரியலூர்: 220 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூரில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் அன்பரசி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் 220 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தினர்.
Similar News
News August 12, 2025
அரியலூர்: பொதுத்துறையில் வேலை-APPLY NOW

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 12, 2025
அரியலூர் மாவட்ட மழை அளவு விவரம்

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் (ஆக.10) இரவு முதல் நேற்று (ஆக.11) காலை வரை பெய்த பலத்த மழையின் அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
➡️அரியலூர்-42
➡️திருமானூர்-59.6
➡️ஜெயங்கொண்டம்-28
➡️செந்துறை58
➡️ஆண்டிமடம்-17.2
➡️சித்தமல்லி அணை-58
➡️குருவாடி-44
➡️தா.பழூர்-21
என மாவட்டத்தில் மொத்தம் 327.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் சராசரி 40.98 மில்லி மீட்டர் ஆகும்.
News August 12, 2025
ஆட்சியரிடம் பொதுமக்கள் 276 மனுக்கள் சமர்ப்பிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 11) ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 276 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.