News December 27, 2025
அரியலூர்: 1000 ஆண்டு பழமையான ஜமதக்னீஸ்வரர் கோயில்

அரியலூர் அருகே அமைந்துள்ளது இந்த ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில். இது 1166 இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. வயிற்றுவலி, கண்நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வணங்கி செல்கின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். நண்பர்களுக்கு இதை பகிரவும்.
Similar News
News December 28, 2025
அரியலூர்: மணல் கடத்தியர் தப்பி ஓட்டம் – போலீசார் தேடல்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அறங்கோட்டை பகுதிகளில் நேற்று(டிச.27) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுக்குச் செல்லும் சாலையின் வழியாக வந்த மாட்டு வண்டியை சோதனை செய்ய முயன்ற போது, மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் வண்டியை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
News December 28, 2025
அரியலூர்: கஞ்சா கடத்தல் – ரயில்களின் தீவிர சோதனை

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர், குருவாயூர் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலம் என்பதால் தீவிர கஞ்சா தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனர். பண்டிகைக் காலங்களில் கஞ்சா கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இச்சோதனை மேற்கொண்டார்கள்.
News December 28, 2025
அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.27) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


