News September 8, 2025
அரியலூர்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

அரியலூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். SHARE IT NOW…
Similar News
News September 8, 2025
அரியலூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறை ஆய்வு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி ஆய்வு செய்தார், ஆய்வில் பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News September 8, 2025
அரியலூர் ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற ஆசிரியர்கள்

அரியலூர் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர்கள் ம.குணபாலினி, த.பெரியசாமி, அ.பெலிக்ஸ் அமலன் பட்டதாரி ஆசிரியர்கள் பி.சார்லஸ் ஆரோக்கியசாமி, வி.எமல்டா குயின்மேரி, சு.ஆறுமுகம் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News September 8, 2025
ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இணையான ஊதியம் வழங்க வேண்டும் சாலை, பணியாளர்களின் 41 மாதம் பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.