News September 14, 2025
அரியலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின்கீழ் ஒரு எக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து உபயோகிப்பதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
மக்கள் நீதிமன்றத்தில் 1500 வழக்குகள் விசாரணை

ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 1500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் 270 வழக்குகளும், வங்கி வழக்குகளில் 34 வழக்குகளும் என 666 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சார்பு நீதிபதி ராஜா மகேஸ்வர், சார்பு நீதிமன்ற நீதிபதி பிரேம் குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணதாசன் நீதித்துறை நடுவர் பாலமுருகன் ஆகியோர் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.
News September 13, 2025
BREAKING: அரியலூர் புறப்பட்ட விஜய்

திருச்சியில் பரப்புரை முடித்துவிட்டு தவெக தலைவர் விஜய் அரியலூருக்கு சாலை மார்க்கமான புறப்பட்ட நிலையில், அவருக்கு தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிலையில் சற்று நேரத்தில் விஜய் அரியலூர் வந்தடைய் உள்ளார். அரியலூர் அண்ணாசாலை பகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் அவர், அதனை முடித்துவிட்டு பெரம்பலூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News September 13, 2025
அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருமானூர் வட்டாரம், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் விஜயலெட்சுமி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டார். முகாமில் ஏலாக்குறிச்சி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.