News December 9, 2024
அரியலூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூா் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: சிறு/குறு /பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியமாக கருவியின் மொத்தவிலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.7000 வரை மானியமாக வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு அரியலூர் உதவி செயற்பொறியாளா், வேளாண்மை துறை அலுவலகங்களை அணுகலாம்.
Similar News
News March 3, 2026
அரியலூர்: பாமகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலின்படியும், பாமக இணை பொது செயலாளர் வழிகாட்டலின் படியும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து இந்த துண்டு பிரசுரங்களை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
News March 3, 2026
அரியலூர்: இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்!

அரியலூர் மாவட்டம், சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெய் காவல் புத்தூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது திடீரென கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர் பலத்த காயமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News March 3, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.02) இரவு 10 முதல் இன்று (மார்ச்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


