News December 20, 2025
அரியலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு மையத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு சோதனை நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியை பார்வையிட்டனர். மேலும், அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் தங்களது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தனர்.
Similar News
News December 20, 2025
அரியலூர்: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 24,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் SIR பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
அரியலூர் ஆட்சியரிடம், எம்எல்ஏ கடிதம்

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமியை நேற்று (டிச.19) ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் சந்தித்தார். அப்போது, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற வேண்டிய பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும், பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றிட வேண்டியும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை கடிதம் ஒன்றை ஆட்சியரிடம் வழங்கினார்.
News December 20, 2025
அரியலூர்: தாமரை கொடியில் சிக்கி மான் பலி

அரியலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் நேற்று தாமரை கொடியில், ஒரு மான் சிக்கி உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் அந்த மானை மீட்டு கரையோரம் கொண்டு வந்துள்ளனர். மேலும், இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மானின் சடலத்தை மீட்டு, தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


