News October 23, 2025

அரியலூர்: வாகனங்கள் பொது ஏலம்

image

அரியலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வருகிற 28ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 22 இரண்டு சக்கர வாகனங்களும் ஏலம் விட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 23, 2025

அரியலூர்: டிகிரி போதும்..வங்கியில் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK HERE<<>>]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 23, 2025

ஜெயங்கொண்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்.25ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 23, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.22) இரவு 10 மணி முதல் இன்று (அக்.23) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!