News January 2, 2026
அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.1) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 2, 2026
அரியலூர்: திருமணத் தடை தீர்க்கும் நந்தி பகவான்

அரியலூர், திருமழபாடி என்ற ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. இங்கு திருமணம் தடை இருப்பவர்கள், திருமணம் தாமதமாபவர்கள் எல்லாம் பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தியின் திருமணத்தை பார்த்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மணமுடிக்காத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News January 2, 2026
அரியலூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முதற்கட்ட பணிகள் நிறைவு பெற்றது. மேலும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்த்து கொள்வதற்காக நாளை அரியலூர் மாவட்ட அணைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 2, 2026
அரியலூர்: தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கல்

அரியலூர் மாவட்டத்தில், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் 4, 5 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


