News December 21, 2025
அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.20) இரவு 10 மணி முதல் இன்று (டிச.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 21, 2025
அரியலூர்: கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதிமுகவையும் கண்டித்து நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, அமைச்சர் சிவசங்கர் திமுக நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
News December 21, 2025
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

அரியலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
அகில இந்திய அளவில் தங்கம் வென்ற அரியலூர் மாணவன்

உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வரும் 2025-26ஆம் கல்வியாண்டு, அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தடகளப் போட்டியில், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 பயிலும் அரியலூர் விளையாட்டு விடுதி மாணவன் யோபின், நீளம் தாண்டுதல் போட்டியில் 6.96 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் தட்டி சென்ற
மாணவனுக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


