News April 11, 2025

அரியலூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News August 23, 2025

ஜெயங்கொண்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சியில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் (23.8.2025) சனிக்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தையில் நடைபெற உள்ளது. ஆகவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த முகாம்களில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது.

News August 23, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், (ஆக.,22) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 22, 2025

அரியலூர்: மனக்குறை நீங்கனுமா? இந்த கோயில் செல்லுங்கள்!

image

அரியலூர், அஸ்தினாபுரத்தில் முருகப்பெருமான் கோயில் உள்ளது, இந்த கோயிலில் 23 அடி உயரமுள்ள முருகப்பெருமான் சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால், மனக்குறை நீங்கும், எதிரிகள் தொல்லைகள் விலகும், ஞானம் பெருகும், வியாபாரத்தில் விருத்தி உண்டாகும், தைரியம் கிடைக்கும், கஷ்டங்கள் நீங்கி நன்மை உண்டாகும், மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!