News September 28, 2025
அரியலூர்: ரூ.20.5 லட்சம் நிதியுதவி

மீன்சுருட்டி காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, இவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில், காக்கும் உறவுகள் 2017 என்ற வாட்ஸ் அப் குழு மூலம் மொத்தம் ரூ.20½ லட்சம் நிதி திரட்டப்பட்டது. இதையடுத்து அரியலூர் எஸ்.பி பா.சாஸ்திரி, சதீஷின் குடும்பத்தை நேற்று நேரில் அழைத்து அவர்களுக்கு நிதியை வழங்கினார்.
Similar News
News January 6, 2026
அரியலூர்: ரூ.3 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 6, 2026
அரியலூர்: வெளுத்து வாங்க போகும் மழை…

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.9 மற்றும் ஜன.10-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News January 6, 2026
அரியலூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

மத்திய, மாநில அரசின் உதவியோடு இலவசமாக மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-ம், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. <<18777234>>(பாகம்-2)<<>>


