News April 18, 2025
அரியலூர் – ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
Similar News
News July 5, 2025
அரியலூரில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே (04-07-2025) அரியலூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரத்தை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தங்களது பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.
News July 4, 2025
அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இருசக்கங்களில் பயணிக்கும் போது சாலையில் சாகசத்தை தவிர்க்க வேண்டும். மீறினால் நடவடிக்கை ஏற்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News July 4, 2025
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை. சைபர் குற்றங்களை ஆள் மாறாட்டம் செய்து, தங்களை police NCB CBI RBI மற்றும் பிற சட்ட அமலாக்க துறை என்றும் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக கூறி நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கிறார்கள். எனவே, இத்தகைய ஆள் மாறாட்ட அழைப்பு மோசடியில் ஏமாறதீர்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.