News March 18, 2024
அரியலூர்: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகுமாறு இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
அரியலூர்: நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அறிவிப்பு

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்: வாகன விபத்தில் பெண் பலி

ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு அருகே, இன்று அதிகாலை 5 மணி அளவில விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த வாகனம் ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்தது. இதில் பயணித்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சாலையில் திடீரென நாய் குறுக்கிட்டதால் இத்துயர சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.