News December 20, 2024
அரியலூர்- மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தேவையற்ற எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. ஆதார் கார்டை வங்கி கணக்குடன் அப்டேட் செய்வதற்கு APK செயலியை பதிவிறக்கம் செய்யும்படி பெறுநர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் SBI இலிருந்து வந்ததாகக் கூறப்படும் செய்தி ஒரு மோசடி ஆகும் வங்கியை நேரில் அணுகி KYCஅப்டேட் செய்து கொள்ளவும் என அறிவுறுத்தப்படுகிறது.
Similar News
News March 3, 2026
அரியலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
அரியலூர்: பாமகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலின்படியும், பாமக இணை பொது செயலாளர் வழிகாட்டலின் படியும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து இந்த துண்டு பிரசுரங்களை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
News March 3, 2026
அரியலூர்: இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்!

அரியலூர் மாவட்டம், சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெய் காவல் புத்தூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது திடீரென கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர் பலத்த காயமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


