News September 2, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்க கட்டிடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை, இன்று மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு தற்போது வரை முடிக்கப்பட்ட பணிகளின் விவரம் மற்றும் எஞ்சியுள்ள பணிகளின் விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News September 2, 2025
அரியலூர்: போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் பல்வேறு நிலையிலான 1513 காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 10ம் தேதிமுதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பபடுபவர்கள் அரியலூர்மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது அவசர காலங்களில் தமிழ்நாடு முழுவதும் தீயணைப்புத் துறையினரை 112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதேபோன்று அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தினை 04329-222100, செந்துறை நிலைய அலுவலகத்தினை 04329-242399, ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தினை 04331-250359 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
அரியலூர்: பேருந்தில் மீதி சில்லரை வாங்க வில்லையா?

அரியலூர் மக்களே, பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க.