News January 21, 2025
அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், 2025-26ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
Similar News
News August 21, 2025
அரியலூர்: தமிழக போலீசில் வேலை

அரியலூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News August 21, 2025
சைபர் குற்ற பாதுகாப்பிற்கான எளிய வழிமுறைகள் வெளியீடு

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் மோசடிகளை தவிர்க்க இரண்டு எளிய வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கைபேசியில் தெரியாத இணைப்பை கிளிக் செய்யாதீர்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பகிராதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகாருக்கு 1930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <