News January 9, 2026
அரியலூர் மாவட்டத்தில் 200 போக்சோ வழக்குகள் பதிவு!

அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ் கடந்த ஆண்டு 200 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 43 பெண்கள் உள்பட 294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குழந்தை திருமணத்தால் நடந்த போக்சோ குற்றத்திற்காக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
அரியலூர்: கொள்முதல் நிலையங்களில் நெல்லின் விலை?

அரியலூர் மாவட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு என்ன விலை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதில், “A கிரேட் நெல்லுக்கு, மத்திய அரசின் ஆதார விலை மாநில அரசின் ஊக்க தொகை சேர்த்து ரூ.2,545; பொதுரக நெல்லுக்கு மத்திய அரசின் ஆதார விலை மாநில அரசின் ஊக்க தொகை சேர்த்து ரூ 2,500 விலை வழங்கப்படும்.” என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர்: லோடு வாகனம் மோதி ஒருவர் பலி

அரியலூர் மாவட்டம் மெய்க்காவல் புத்தூர் கிராமத்தில், லோடு வாகனத்தில் ஹாலோ பிளாக் கல் ஏற்றி சென்றுள்ளனர். வாகனத்தின் பின்னால் இருந்து ரிவர்ஸ் வரச்சொல்லி விக்னேஷ் (23) என்பவர், சைகை காட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லோடு வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.