News March 4, 2026

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 5 ரேஷன் கடைகள்!

image

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா இன்று (மார்ச்- 04) பொய்யாதநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்படி பொய்யாதநல்லூர், வெள்ளூர், சென்னிவனம், தேளூர், ஏழேரி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நியாயவிலை கடைகள் திறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 6, 2026

அரியலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

அரியலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

அரியலூர்: குளத்தில் மூழ்கி பெண் உயிரிழப்பு!

image

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள நாச்சியார் குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரம் பள்ளிக்கூட தெருவைச் சார்ந்த ரவி என்பவர் மனைவி பஞ்சவர்ணம் என்பது பின்னர் தெரியவந்தது. மேலும் இவர் கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

News March 6, 2026

அரியலூர்: உழவர் நல சேவை மையங்களில் ஆய்வு!

image

தமிழக முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்ட வேளாண்மை படிப்பு தோட்டக்கலை படிப்பு பட்டதாரிகளுக்காக, உழவர் நல சேவை மையம் தொடங்கப்பட்டது. அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் 12 உழவர் நல சேவை மையங்கள் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. இதில் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள சுந்தரேசபுரம், சுத்தமல்லி, நடுவலூர், வெண்மான் கொண்டான் உள்ளிட்ட உழவர் நல சேவை மையங்களை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!