News September 26, 2025

அரியலூர் மாவட்டத்தில் உரங்களின் இருப்பு விவரம்

image

அரியலூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 912 மெட்ரிக் டன் யூரியா, 1316 மெட்ரிக் டன் டிஏபி, 683 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1951 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கபட்டு விநியோகம் செய்யபட்டு வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 186 மெட்ரிக் டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 5, 2026

அரியலூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 5, 2026

அரியலூர்: கடன் தொல்லை நீங்க.. இங்க போங்க!

image

அரியலூர், பொய்யாத நல்லூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தையல்நாயகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் கடன் பிரச்சனை உள்ளவர்கள், குடும்ப பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சனை உள்ளவர்கள் மூலவரான தையல்நாயகி அம்மனுக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால், வேண்டியது நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News January 5, 2026

அரியலூர்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரியலூா் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி.,

1. நாகா்கோவில்-தாம்பரம் ரயில்: ஜன.12, 19 அதிகாலை 5.39 மணி
2. தாம்பரம்-கன்னியாகுமரி ரயில்: ஜன.12, 19 இரவு 7 மணி
3. திருநெல்வேலி-செங்கல்பட்டு அதிவிரைவு ரயில்: ஜன.9, 10, 16, 17 அதிகாலை 3.45 மணி
4. ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில்: ஜன.13 அதிகாலை 4.03
இதே ரயில்கள் மறுமார்க்கமாக செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE

error: Content is protected !!