News March 28, 2025
அரியலூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற 6 கோவில்கள்

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் காட்டாயம் செல்ல வேண்டிய 6 கோவில்கள் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம். 1.கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், 2.திருமழபாடி வைத்தியநாதர் கோயில், 3.மேலப்பழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், 4.அரியலூர் வராகமூர்த்தீஸ்வரர் கோயில், 5.அகரம் ஏகாம்பரேஸ்சுவரர் கோயில், 6.கொண்டண்டராமசுவாமி கோவில். இதை ஷேர் பண்ண மறந்துடாதீங்க!
Similar News
News April 1, 2025
பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலந்துறையார் கோயில்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ளது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் கோயில். இங்குள்ள மூலவர் ஆலந்துறையார், அருந்தவநாயகி ஆவர். சிவபெருமானை பிரிந்து சென்ற பார்வதி தேவி இங்கு தவம் செய்து மீண்டும் சிவபெருமானுடன் சேர்ந்தார். ஆகையால் இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியரும் சேருவர் என கூறுகின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் மாத்ருஹத்தி தோஷம், திருமணத் தடை போன்றவையும் நீங்கும் என்கின்றனர். இதை பகிரவும்
News April 1, 2025
அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <
News April 1, 2025
ஜெயங்கொண்டம்: மூதாட்டியை தாக்கிவிட்டு திருட்டு முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் (42). இவர் கூலி வேலைக்காக மேலமைக்கேல்பட்டி கிராமத்திற்கு சென்றபோது, அங்குள்ள ஒரு வீட்டில் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் இருந்த 95 வயது மூதாட்டி சத்தமிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். இதனால் அந்த மூதாட்டியை தாக்கியுள்ளார்.அப்போது பொதுமக்களே அவரை பிடித்து கட்டி வைத்து தா.பழூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.