News November 13, 2025
அரியலூர் மாவட்டத்தின் தனிச்சிறப்பு தெரியுமா?

சுண்ணாம்புக் கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். இப்படியாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக அரியலூர் உள்ளது.
Similar News
News November 13, 2025
அரியலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் தாலுகா நடுவலூர் பாரத மாதா ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அணைத்து தரப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர், அதேபோல், அமைப்புசாரா தொழில் நலவாரிய பணியாளர்களும் உரிய ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
News November 13, 2025
அரியலூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 13, 2025
அரியலூர்: ரூ.1 லட்சம் பரிசு வேண்டுமா?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக நலத்துறை அலுவலகத்தில் 26/11/2025-ம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என அரியலூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.


