News December 28, 2025
அரியலூர்: மணல் கடத்தியர் தப்பி ஓட்டம் – போலீசார் தேடல்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அறங்கோட்டை பகுதிகளில் நேற்று(டிச.27) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுக்குச் செல்லும் சாலையின் வழியாக வந்த மாட்டு வண்டியை சோதனை செய்ய முயன்ற போது, மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் வண்டியை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
அரியலூர் வருவாய் துறைக்கு 5 புதிய வாகனங்கள் வழங்கல்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (ஜன.8) அரியலூர் வருவாய்த் துறைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 5 புதிய வாகனங்களை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் நகர மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News January 9, 2026
அரியலூர் மாவட்டத்தில் 200 போக்சோ வழக்குகள் பதிவு!

அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ் கடந்த ஆண்டு 200 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 43 பெண்கள் உள்பட 294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குழந்தை திருமணத்தால் நடந்த போக்சோ குற்றத்திற்காக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி தெரிவித்துள்ளார்.