News December 11, 2025

அரியலூர்: பெண் போல நடித்து பண மோசடி!

image

ஆண்டிமடத்தில் வசிக்கும் பார்த்திபன் என்பவரிடம் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு பெண் போல நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது. பின்னர் வர்த்தக வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.17,50,000 முதலீடு செய்ய வைத்து மோசடி செய்து ஏமாற்றப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அசார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News April 5, 2026

அரியலூர்: மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு

image

அரியலூரில் பிரசித்தி பெற்ற கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. இங்கு உள்ள உண்டியல் உடைந்து கிடந்ததை பார்த்த கோயில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் சிசிடிவியை ஆய்வு செய்தபோது, மர்ம ஆசாமி ஒருவர், குடையால் முகத்தை மறைத்து உண்டியலில் திருட முயன்றுள்ளார். ஆனால் உள் பூட்டை உடைக்க முடியாததால், விரக்தி அடைந்து திரும்பி சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 5, 2026

அரியலூர் மாவட்ட கலெக்டர் கடும் எச்சரிக்கை..!

image

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சட்ட விரோதமாக சிலிண்டர்களை பதுக்கினால் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் பிரிவு மூலம் கடும் நடவடிக்கை எடுத்திட மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், தேவையான அளவு சிலிண்டர் உள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

News April 5, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.4) இரவு 10 முதல் இன்று (ஏப்ரல்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!