News January 7, 2026
அரியலூர்: பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் பஸ் பாஸ் பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை முதல் 31-ம் தேதி வரை அரியலூர் மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
அரியலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News January 27, 2026
அரியலூர்: 1000 ஆண்டுகள் பழமையான கோயில்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையவர் தீயனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஜமதக்னீஸ்வரர் கோயில், இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். மேலும், இக்கோயில் சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் வழிபாடு செய்தால் வயிற்றுவலி, கண் நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT.
News January 27, 2026
அரியலூர்: கேஸ் மானியம் வரவில்லையா? இத TRY பண்ணுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா? உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.


