News November 19, 2025
அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News April 1, 2026
அரியலூர்: போலீசாருக்கு வாக்குச்சாவடி பணிக்கான பயிற்சி

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நாளில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது, வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க உதவுவது, வாக்குச்சாவடி வளாகத்தில் அமைதியை நிலைநிறுத்துவது மற்றும் தேர்தல் விதிமுறைகளை, பின்பற்றி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
News April 1, 2026
அரியலூர்: தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை (Media Control Room) செயல்பாடுகளை, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் லட்சுமி நாராயண பொக்கா, நேற்று (31.03.2026) நேரில் பார்வையிட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
News April 1, 2026
அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.31) இரவு 10 முதல் இன்று (ஏப்ரல் 01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


