News March 29, 2025
அரியலூர்: தீராத தோஷங்களை தீர்க்கும் சனீஸ்வர பகவான்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள அம்பலவர்கட்டளை கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு அடுத்ததாக நவகிரகங்கள் அமைக்கப்படாமல் சனீஸ்வர பகவானுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் சனிப்பெயர்ச்சியன்று இங்குள்ள சனீஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. SHARE NOW!
Similar News
News February 4, 2026
அரியலூர்: பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீசார் பாப்பாக்குடி மேம்பாலத்தின் கீழே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாகசகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட போலீசார், நால்வரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
News February 4, 2026
இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்03) இரவு 10 முதல் இன்று (பிப்04) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!