News March 28, 2024

அரியலூர்: தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்

image

அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்  திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

Similar News

News October 29, 2025

அரியலூர்: உங்க பெயரை மாற்ற சூப்பர் சான்ஸ்!

image

தங்களது பெயரை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை SHARE பண்ணுங்க!

News October 29, 2025

அரியலூர்: கோயிலில் திருடிய 4 பேர் கைது

image

நெருஞ்சிக்கோரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் கடந்த 23-ம் தேதி மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து, கோயிலில் உள்ள பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக அரியலூர் நகர போலீசார் மணிவேல் (50), ராஜீவ்காந்தி (35), சின்னதம்பி (24), செல்லமுத்து (49) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News October 29, 2025

அரியலூர்: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

image

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஐயப்பன் நாயக்கன் பேட்டை கிராமத்தில் தனசாமி-ராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் ராணி உடல்நலக் குறைவினால் திங்கட்கிழமை (அக்.27) உயிரிழந்தார். இறுதிச் சடங்கு நேற்று (அக்.28) நடைபெற்ற நிலையில், அவரது கணவராகிய தனசாமி மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாமல் இருந்த தம்பதியினரை நினைத்து அக்கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

error: Content is protected !!